அரசு பள்ளிகளில் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு தமிழக அரசானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வினை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய பட்டதாரிகளே முதுகலை ஆசிரியராக நியமிக்கப்படுவர். முதுகலைப் பட்டத்துடன் கல்வியியல் பட்டம் முடித்தவர்களே இத்தேர்வினை எழுத தகுதி உள்ளவர்கள். பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியமானது இத்தேர்வினை இணைய வழித்தேர்வாக நடத்தி வருகின்றது. இத்தேர்வு 150 மதிப்பெண்களைக் கொண்டது. அவரவர் முதன்மைப் பாடத்தில் 110 மதிப்பெண்களும் கல்வியியல் பாடத்தில் 30 மதிப்பெண்களும் பொதுஅறிவு பாடத்தில் 10 மதிப்பெண்களும் அடங்கியத் தேர்வாக இத்தேர்வு அமைந்திடும்.
தமிழ்ச்சோலை கல்விக்கழகத்தின் சிறப்பம்சங்கள் :
➣ 2019இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில் தமிழ்ச்சோலையின் 5 நூல்களிலிருந்து 81 வினாக்கள் (73.6 சதவீதம்) இடம்பெற்றுள்ளன.
➣2019இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழித் தேர்வில்(Online Test) பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட நண்பர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Certificate Verification) அழைக்கப்பட்டுள்ளனர்.
➣தமிழ்ச்சோலை, முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது.
➣முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டமானது சிறந்த முறையில் நடத்தப்படும்.
➣வகுப்பில் கலந்து கொள்ளக் கூடிய மாணவர்களுக்கு மூலநூல்கள் மற்றும் நமது தமிழ்ச்சோலையின் நூல்களும் வழங்கப்படும்.
➣பார்வையற்ற நண்பர்களுக்கு பயிற்சி வகுப்பிற்கு கட்டணம் ஏதும் கிடையாது.
➣மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.
➣பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இணைய வழித் தேர்வு (Online Exam) தொடர்ந்து சிறப்பான முறையில் நடத்தப்படும்.
➣தேர்வில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும்.
➣ஒவ்வொரு வகுப்பிலும், நடத்தும் பாடத்திற்கேற்ற சிறப்பான குறிப்புகள் ( Topic Notes )வழங்கப்படும்.