என் உயிரினும் மேலான தாய்த்தமிழை வணங்குகிறேன். அக்டோபர் 14 2018 அன்று தமிழுக்காகவே உருவாக்கப்பட்டதே நமது தமிழ்ச்சோலை! உயிரென நேசித்த என் இனிய தமிழ் எனக்கு அளித்திட்ட அருட்கொடையே தமிழாசிரியர் பணி. பல ஆண்டுகள் அரசு பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி தற்போது கல்லூரியில் பணியாற்றுகின்ற தமிழ்மகள் நான். எம் போன்று தமிழ் இலக்கியம் பயின்ற தோழர்களுக்கும், அரசு பணித்தேர்வுகளில் தமிழ்த் தேர்வு எழுதக்கூடிய சகோதர சகோதரிகளுக்கும் ஏதேனும் ஒரு நலம் புரிய வேண்டும் என்ற நல்ல நோக்கில் உருவாக்கப்பட்டதே இத்தமிழ்ச்சோலை! “தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்” என்று நாவுக்கரசர் சுவாசித்த தமிழானது இவ்வுலகம் உள்ளவரை நிலைத்திருக்க வேண்டும் என்பதே தமிழ்ச்சோலையின் நோக்கமாகும். தமிழால் வாழுகின்ற நாமும் நம் தலைமுறையும் தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்வதே தமிழுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். தமிழால் ஏற்றம் பெற்ற தோழர்களும் சகோதர சகோதரிகளும் நம் தலைமுறையினரை தமிழ்வழிக் கல்வியில் பயில வைப்போம்! தமிழ்வழிக் கல்வியில் பயில்வோரை ஊக்கப்படுத்துவோம்! தமிழ் பயில்வோரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவோம்!
➣ 2019இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில் தமிழ்ச்சோலையின் 5 நூல்களிலிருந்து 81 வினாக்கள் (73.6 சதவீதம்) இடம்பெற்றுள்ளன.
➣2019இல் நடைபெற்ற PG-TRB போட்டித்தேர்வில், நமது இணையவழித் தேர்வில்(Online Test) பங்கேற்ற 150க்கும் மேற்பட்ட நண்பர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Certificate Verification) அழைக்கப்பட்டுள்ளனர்.
➣தமிழ்ச்சோலை, முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது.
➣முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான பாடத்திட்டமானது சிறந்த முறையில் நடத்தப்படும்.
➣வகுப்பில் கலந்து கொள்ளக் கூடிய மாணவர்களுக்கு மூலநூல்கள் மற்றும் நமது தமிழ்ச்சோலையின் நூல்களும் வழங்கப்படும்.
➣பார்வையற்ற நண்பர்களுக்கு பயிற்சி வகுப்பிற்கு கட்டணம் ஏதும் கிடையாது.
➣மாற்றுத் திறனாளி நண்பர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.
➣பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு இணைய வழித் தேர்வு (Online Exam) தொடர்ந்து சிறப்பான முறையில் நடத்தப்படும்.
➣தேர்வில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்படும்.
➣ஒவ்வொரு வகுப்பிலும், நடத்தும் பாடத்திற்கேற்ற சிறப்பான குறிப்புகள் ( Topic Notes )வழங்கப்படும்.